articles

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஒ வ்வொரு நிமிடமும் பாலஸ்தீனத்தின் காசா அழி வின் பிடியில் சிக்கி வருகிறது; நமது கண்முன்பே  ஒரு மிகப்பெரும் மனிதப் பேரழிவு நடந்து கொண்டிருக்கிறது; உடனடியாக இதை நிறுத்திவிட்டு பின்வாங்குமாறு இதற்கு பொறுப்பான அனைவரை யும் வற்புறுத்துகிறேன் என்று ஐ.நா பொதுச் செய லாளர் அந்தோணியோ குட்டரெஸ் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்.  இத்தகைய நாகரிகமான அறிவுரையையோ வேண்டுகோளையோ பரிசீலனை செய்யும் நிலையில் அல்லது அதை உணரும் நிலையில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டாளிகள் இருக்கிறார்களா என்பதே கேள்வி. இல்லை.

இவர்கள் மனிதப் படுகொலைகள் அதிகரிக்க அதிகரிக்க அதிலிருந்து கொள்ளை லாபத்தை ஈட்டுகிற கைக்கூலிகள்.